கொடைக்கானல் அருகே மொபட் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: விபத்தில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளாக உள்ள தாண்டிக்குடியில் இருந்து புல்லாவெளி செல்லக்கூடிய பகுதியில் விபத்து ஏற்பட்டது. சின்னாளப்பட்டியில் இருந்து வாலிபர் வர்கீஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும் பொழுது, எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். இதில், நிலைதடுமாறி பைக்குடன் வாலிபர் வர்கீஸ் கீழே விழுந்த நிலையில், அவரது இருசக்கர வாகனம், திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அப்பகுதிகள் பதற்றம் அடைந்த நிலையில், சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபரை, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மலைப்பகுதிகளில் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் செல்வதால் இதுபோன்று விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அசத்துடன் பயணம் செய்வதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்தனர்.              …

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்