கொடைக்கானலில் செயல்படாத சிசிடிவி

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இதையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க கொடைக்கானல் காவல் துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பல செயல்படாமல் உள்ளன. மேலும் சுற்றுலா தலங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என எஸ்பி சீனிவாசன் தெரிவித்தார். ஆனால் இதுவரை கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள், சமூகவிரோத செயல்கள் அரங்கேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்படாத சிசிடிவி கேமராக்களை செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், தேவையான இடங்களில் கூடுதல் கேமராக்களை பொறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை