கொடைக்கானலில் இரண்டாம் சீசனை வரவேற்கும்

கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை சார்பில் உள்ள செட்டியார் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ‘ஈப்போல்பியா புல்செரிமா’ என்ற தாவர வகையை சேர்ந்த பைன் சிட்டியா என்ற அழகிய சிவப்பு நிற மலர்கள் இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக பூத்துள்ளது. பைன் சிட்டியா மலர்கள் பச்சை , சிவப்பு , மஞ்சள், மெரூன் ஆகிய நான்கு வண்ணங்களில் பூக்கும். இவை செடிகள் போன்றும் இல்லாமல், மரங்கள் போன்று இல்லாமல் புதர்ச்செடிகள் போன்று வளரக்கூடியது. இந்த வகை மலர்கள் பனிக்காலங்களில் அதிக அளவில் பூக்கும். இலை போன்ற வடிவில் இந்த பூக்கள் இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் வெளிர் நிற சிவப்பு கலரில் இருப்பது இந்த மலரின் சிறப்பாகும். குறிப்பாக குளிர்காலங்களில் மலர்கள் பூப்பது கிடையாது. இந்த மலர்கள் குளிர் காலங்களில் மட்டுமே பூக்கக்கூடியவை. தற்போது இந்த மலர்கள் கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த வகை மலர்களை சிவப்பு, பச்சை வண்ணங்களில் கண்டு மகிழலாம்….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்