கொடைக்கானலில் அனுமதியின்றி வாடகைக்கு விட்ட 2 டூவீலர்கள் பறிமுதல்

கொடைக்கானல், நவ. 26: கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருகை தருகின்றனர். சில சுற்றுலா பயணிகள் பஸ்களில் வருகை புரிந்து நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்தும் செல்கின்றனர்.

இந்நிலையில் சில தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி இருசக்கர வாகனம் வாடகைக்கு விடப்பட்டு வருவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியின்றி இருசக்கர வாகனம் வாடகைக்கு விடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாடகைக்கு விடப்பட்ட 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?