கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சசிகலா உள்பட 230க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ. ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், நவீன் பாலாஜியிடம், சசிகலா பிரமாண்டமான ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அவரிடம் கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் மாயமானது குறித்தும் விசாரிக்கப்பட்டது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் 3 நாள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரன் என்பவரிடம் போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையில் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கனகராஜ் குறித்தும், கொடநாடு பங்களாவில் இருந்து காணாமல்போன ஆவணங்கள் குறித்தும் குணசேகரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை