கொசஸ்தலை ஆற்றின் கரை உடைந்து வெள்ளம்: அரசு பள்ளியில் மெகா பள்ளம்: மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கால்  சொரக்காபேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர்  மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. பள்ளிப்பட்டு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் சொரக்காபேட்டை அருகே கொசஸ்தலை  ஆற்றின் கரைப்பகுதி வெள்ளப்பெருக்கின் வேகத்திற்கு துண்டிக்கப்பட்டு வெள்ளம் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகுந்தது. வெள்ளப்பெருக்கு அதிக அளவில் பள்ளியில் சூழ்ந்துகொண்டதால் பள்ளி சுற்றுச்சுவர், நீர் ஏற்றும் அறை உடைந்தும், மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததோடு வகுப்புகளில் வெள்ளம் தேங்கியது. இதற்கிடையில், மழை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டது.அதன்படி சொரக்காய்ப்பேட்டை அரசு பள்ளிக்கு மாணவர்கள் ஆர்வமுடன் ேநற்று வந்தனர். இதையடுத்து, பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில், இங்குள்ள 3 அடுக்கு கட்டிடத்தின் அஸ்திவாரம் முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்பட்டது. இதில், மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால், பீதியடைந்த மாணவர்கள் வகுப்புகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகம் சார்பாக மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளி கட்டடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்தனர். கட்டிடத்திற்கு அதிக அளவில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பதால் 3 மாடி கட்டிடம் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

செத்தாலும் இனிமேல் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன்: டெல்லி செல்லும் அண்ணாமலை பேட்டி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், UPSC சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!