கொக்கி மாட்டி மின்சாரம் திருட்டு: பஞ்சாயத்து செயலாளருக்கு ₹90 ஆயிரம் அபராதம்; மின் வாரியம் அதிரடி

திருச்சி, ஜூன் 27: திருச்சியில் மின் கம்பத்தில் கொக்கி மாட்டி மின்வாரியத்துக்கு தெரியாமல் மின்சாரம் திருடி வந்த பஞ்சாயத்து செயலாளருக்கு மின் வாரியம் ₹90 ஆயிரம் அதிரடியாக அபராதம் விதித்தது. திருச்சி திருவானைக்காவலையடுத்த உத்தமர்சீலியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அந்த ஊரின் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார். இவர் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் மின் கம்பத்தில் இருந்து கொக்கி மாட்டி மின்சாரம் திருடி வந்துள்ளார்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் சென்றது. தகவலின் பேரில் மின்வாரிய அலுவலர்கள் ராஜகோபால் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மின் கம்பத்தில் இருந்து கொக்கி மாட்டி ராஜகோபால் மின்சாரம் திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜகோபாலுக்கு மின்வாரிய அலுவலர்கள் ்அதிரடியாக ₹90 ஆயிரம் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்