கை கொடுக்கும் வாத்து வான்கோழி குஞ்சுகள் வளர்ப்பு !

குஜிலியம்பாறையில் வாத்து, வான்கோழி குஞ்சுகள் விற்கும் விவசாயி பாலன்.திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் வாத்து குஞ்சு, வான்கோழி குஞ்சு விற்பனையில் கலக்கி வருகின்றார் விவசாயி பாலன். அரோக்கியமான குஞ்சிகளை குஜிலியம்பாறையில் பட்டி அமைத்து வளர்த்து வருகின்றார். அந்தி சாயும் நேரத்தில் அவரிடம் பேசினோம். ‘‘பூர்வீகம் தர்மபுரி பக்கம் புதுப்பட்டி நானும் விவசாயிதான்.மோசமான வெயில்,, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறைனு விவசாயம் பண்ண முடியலை. மண்ணை நம்புனாலும் மழை கை கொடுக்கலை , இதனால உபதொழிலான கால்நடை, கோழி வளர்ப்பு செய்யலாம்னு முடிவு செய்தேன்.  தர்மபுரி மாவட்டத்தில் போதிய சீதோஷன நிலை இல்லை அதனால பிற மாவட்டங்கள்ல இதற்கு நல்ல வரவேற்பு இருக்கு. பல்வேறு ஊர்களில் உள்ள தரமான  வாத்து, கோழி, வான்கோழிகளை கொண்டு வந்து, திண்டுக்கல் சுற்று பகுதியில் விற்று வருகிறேன். ஆரம்பத்துல கோழி குஞ்சுகள் மட்டும் தான் விற்றேன். இப்போது கிண்ணி கோழி குஞ்சு, வான்கோழி குஞ்சு, வாத்து குஞ்சு, கருங்கோழி குஞ்சுன்னு ஏகப்பட்ட ரகங்களை  வலை கட்டி வைத்து விற்பனை செய்து வருகிறேன். தர்மபுரியில் இந்த குஞ்சுகளுக்கு ஆரம்பத்தில் ஒரு மாதம் வரை தீவனம் போட்டு வளர்த்து பிறகுதான் இங்கே விற்பனைக்கு கொண்டு வந்துடுவேன்.  இதற்கு தீவன செலவு 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.2,430 கூடவே கம்பு, சோளம், அரிசி  உணவாக போட வேண்டும்.இது மட்டுமன்றி மற்ற ஊர்ல இருந்து திண்டுக்கல் குஜிலியம்பாறைக்கு வேனில் கொண்டு வரும் போக்குவரத்து செலவும் இருக்குது. ஆனாலும், மக்களிடம் இந்த குஞ்சுகளுக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. இங்கே வாத்து சிறியது ரூ.350, பெரியது ரூ.500க்கும், வான்கோழி ரூ.650, கிண்ணி கோழி ரூ.400, கருங்கோழி ரூ.350, நாட்டு கோழி ரூ.250க்கும் விற்கிறேன். தீவனம் செலவு, போக்குவரத்து செலவு போனாலும் லாபம் இருக்கு. மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து பத்து நாட்களுக்கு தங்கி, அதுக்குள்ளே கையில் இருக்குற இவற்றையெல்லாம் விற்று ஊர் திரும்பி விடுவேன்.  ஓரளவு இந்த தொழில்ல லாபம் இருக்குது ’’ என்கிறார்….

Related posts

நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11

அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!