கை இழந்தும் நம்பிக்கை தளராமல் தட்டச்சில் கலக்கும் மாணவர்

 

கோவை, செப்.1: தமிழகம் முழுவதும் அரசு தட்டச்சு தேர்வு நடைபெற்று வருகிறது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழக அரசு பணிகளில் சேர தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக இருக்கிறது. போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களில் பெரும்பாலானோர் தற்போது தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு சென்று தட்டச்சு பயிற்சி பெற்று வருகின்றனர்.

தட்டச்சு பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடத்தப்படும். அதன்படி, தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு நேற்று நடந்தது. கோவை அவிநாசி சாலையில் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நடைபெற்ற தட்டச்சு தேர்வில் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர் பங்கேற்றார். இவரது இடது கை சில ஆண்டு முன் விபத்தில் பாதிக்கப்பட்டது. தனது கை பாதிக்கப்பட்ட சூழலில் கல்லூரியில் பிகாம் சிஏ படித்து வருகிறார். இவர் நேற்று நடந்த தேர்வில் பங்கேற்று அசத்தினார்.

Related posts

தஞ்சாவூர் ஆர்ஓ அலுவலகத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

பொன்னமராவதி அருகே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

புதுகை எஸ்பி அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி