கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பயன்பாடின்றி மண் புழு இயற்கை உரம் தயாரிப்பு கூடம் பாழடையும் அவலம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவு பிரிக்கும் அறை,மண்புழு உரம் தயாரிப்பு கூடம், ஆகியவை பயன்பாடின்றி பாழைடைந்து வருவதை  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கே.வி.குப்பம்  ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. சுமார் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசிக்கும் இந்த பகுதியில்  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அந்தந்த ஊராட்சிக்கு சொந்தமான  நிலத்தில், திடக்கழிவு  பிரிக்கும் அறை, மண் புழு இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கூடத்தில்  ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் நாள்தோறும்,  குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம்  பிரக்கப்படும். உணவகங்களில் இருந்து வெளியேற்றக்கூடிய கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்ற மக்கும் குப்பை மீது மாட்டு சாணம் மற்றும் கரைசல் கலந்து, 45 நாட்களில் இயற்கை உரமாக மாற்றும் முயற்சியிலும், இயற்கை உரத்தை மறு சுழற்சி செய்து, மண் புழு உரம் தயாரித்து அதனை  குறிப்பிட்ட நாள் உலர செய்த பின், விற்பனை செய்யும் நோக்கிலும் திடக்கழிவு பிரிக்கும் அறை, மண் புழு இயற்கை உரம் தயாரிப்பு கூடம் ஆகியவை அமைக்கப்பட்டது. இந்த திட்டம் பெரும்பாலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலேயே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஊரக பகுதிகளில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல்  கே.வி.குப்பம்‌ ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கூடங்கள், அறைகள்  பயன்பாடின்றி பாழைடைந்து கிடக்கிறது.  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டபட்ட  திடக்கழிவு பிரிக்கும் அறை, மண் புழு இயற்கை உரம் தயாரிப்பு கூடம் பயன்படுத்தாமல் பாழடைந்து கிடக்கும் அவல நிலை உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வரிப்பணம் இதுபோன்று தேவையின்றி செலவாவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த திட்டம்  கே.வி.குப்பம் போன்ற ஊரக பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை