கே.வி.குப்பம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து சேதம் தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

கே.வி.குப்பம், ஜூன் 23: கே.வி.குப்பம் அருகே இடி‌மின்னலுடன் பெய்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து சேதமானது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜா தோப்பு அணைக்கட்டு பகுதியில் இடி மின்னலுடன் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அப்போது செஞ்சி மோட்டூர் கிராமத்தில் வசிக்கும் விநாயகம் என்பவரது வீடு கனமழையால் சேதமடைந்த சிமெண்ட் ஷீட்டுகள் நொறுங்கி விழுந்தது. மேலும், அவரது வீட்டின் பின்பக்க சுவர் முழுவதும் ஈரப்பதத்தால் இடிந்து விழுந்தது. விநாயகம் மற்றும் அவரது மகன் ஆகியோர் முன்பக்க வீட்டில் உறங்கிக்கொடிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஆர்.ஐ லஷ்மி, விஏஓ ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா உள்ளிட்ட வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விநாயகத்தின் மனைவி ஜெயந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு