கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார்.

கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார்.

விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்