கே.கே.நகர் கோட்ட மின்கட்டண வசூல் மையம் இடமாற்றம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை : கே.கே.நகர் கோட்ட மின்கட்டண வசூல் மையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை தெற்கு – 1, கே.கே. நகர் கோட்டத்திற்கு உட்பட்ட  கோடம்பாக்கம், வடபழனி, ரங்கராஜபுரம் மற்றும் சூளைமேடு ஆகிய  பிரிவுகளின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வசூல் மையம் தற்பொழுது கோடம்பாக்கம், 33/11 கி.வோ துணை மின்நிலையம் எண்: 47, சிவன் கோயில் தெருவில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நாளை முதல் வசூல் மையம்  சிவன் கோயில்  சந்திப்பு, எண்: 316, ஆற்காடு  சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24 என்ற முகவரியில் இயங்கும்’ என கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்