கோவையில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, ஜூலை 11: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார்.

எனவே, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து, பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்