கேளம்பாக்கத்தில் இளம்பெண் கொலை: கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, டவலால் கழுத்து இறுக்கி கொலை செய்த வழக்கில், கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனது அண்ணன் சாவுக்கு காரணமானவரை  பழிக்குபழி வாங்குவதற்காக கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஷாஇன்ஷா (26). கடந்த 2ம் தேதி மாலை ஷாஇன்ஷா, கொலை செய்யப்பட்டிருந்தார். புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஷாஇன்ஷா பலாத்காரம் செய்யப்பட்டு, டவலால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக கொட்டிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (19) என்பவரை, 2 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த கார்த்திக் (19), அவரது நண்பர்கள் கொட்டிவாக்கம் ஆனந்த் (19), கோட்டூர் சுரேஷ் (எ) சுக்குகாபி (22) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, காவல் நிலையம் கொண்டு சென்று, கார்த்திக்கிடம் விசாரித்தனர்.அதில், தனது அண்ணன் விஜய் என்பவருடன் ஷாஇன்ஷாவுக்கு பழக்கம் இருந்தது. கடந்த, சில மாதங்களுக்கு முன் விஜய், செங்கல்பட்டு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதன்படி, விஜய் சாவுக்கு, ஷாஇன்ஷா காரணம் என உறுதியானது. இதனால், தனது அண்ணனின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கவே ஷாஇன்ஷாவுடன் நெருங்கிப் பழகினேன். அப்போது, விஜய் மரணம் குறித்து கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பலாக பேசினார். அதை பற்றி மீண்டும் பேசினால், உனது அண்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என மிரட்டினார்.இதைதொடர்ந்து, கடந்த 2ம் தேதி மது அருந்தி விட்டு, ஷாஇன்ஷா வீட்டுக்கு, எனது நண்பர் ஆனந்துடன் சென்றேன். அங்கு, அவருடன் ஜாலியாக இருந்தேன். பின்னர் டவலால் ஷாஇன்ஷாவை கழுத்தை நெரித்து கொன்றேன் என கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.தொடர்ந்து போலீசார், 3 பேரையும், செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது