கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் ஆர்கிட் தாவரங்களை பராமரிக்கும் பணி தீவிரம்

 

ஊட்டி,ஜன.13 :ஊட்டி அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள ஆர்கிட் தாவரங்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் புலி,சிறுத்தை,காட்டுமாடு,மான்கள்,மலபார் அணில், நீலகிரி லங்கூர் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் சூழல் மேம்பாட்டு குழு மூலம் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பறவைகள்,வன விலங்குகளின் ஒலிகள் எழுப்பும் கருவிகள் உள்ளது.

மேலும், சிறுத்தை,மான்,காட்டு மாடு,அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நீலகிரி தார் எனப்படும் வரையாடுகளின் வாழ்விடமும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் ஏறி நடந்து சென்று பார்த்து மகிழ்வது வழக்கம். இதுதவிர பல வகை ஆர்கிட் மலர் செடிகள் உள்ள பதமை குடில் உள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில் இங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. இதனால் இங்குள்ள ஆர்கிட் தாவரங்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பசுமைக் குடிலில் வைக்கப்பட்டுள்ள இந்த தாவரங்களுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

நம்பர் ஒன் டோல்கேட் திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

நர்சிடம் 9 பவுன் திருட்டு

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் திருப்பணி வேலைகள் முறையாக நடக்கிறதா? 23ம் தேதி மின் நிறுத்தம்