கேரள பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: .கேரள மாநிலத்தில் வரும் 6ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு தொகுதிகளில்  மட்டும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது.  இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, வரும் 6ம் தேதி கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளுக்கு அதிகாரப்பூர்வ  வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அதன்படி, பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தொகுதியில் அதிமுக சார்பில் நசீமாவும், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் தனலட்சுமி ஆகியோரும் வேட்பாளர்களாக  நிறுத்தப்பட்டுள்னர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு