கேரள பெண் மந்திரவாதியின் வீட்டில் தங்கியிருந்த 2 வாலிபர்கள் மாயம்: நரபலி கொடுக்கப்பட்டார்களா?

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா அருகே பேய் ஓட்டுவதாக கூறி சிறுவர், சிறுமிகளை உட்பட பலரை அடித்து, சித்திரவதை செய்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பெண் மந்திரவாதியின் வீட்டிலிருந்து மாயமான 2 வாலிபர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அருகே தர்மபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பத்தனம்திட்டாவில் மலையாளப்புழா என்ற இடத்தில் ஷோபனா என்ற பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். பேய் விரட்டுவதாக கூறி சிறுவர், சிறுமிகள் உட்பட பலரை நிர்வாணப்படுத்தி அடித்து, சித்திரவதை செய்வதாக கூறப்பட்ட புகாரில் இவரும், இவரது கள்ளக்காதலனான உண்ணிகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் மந்திரவாதம் செய்ய வந்த பலரை பின்னர் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் ஷோபனா மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது மடத்தில் தங்கியிருந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் திடீரென மாயமானார்கள். இதன்பின் இவர்கள் இருவரும் அந்த ஊருக்கு திரும்பி வரவில்லை.அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. இது அப்பகுதி மக்களுக்கு இப்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரம் போலீசுக்கும் கிடைத்துள்ளதால் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பத்தனம்திட்டாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளதால் இந்த வாலிபர்களும் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு

கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

இமாச்சல் மாநிலம் திவாலானது: காங்கிரஸ் அரசு மீது கங்கனா காட்டம்