கேரளா தங்கம் கடத்தல் வழக்கு அமீரக துணைத் தூதர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி துணைத் தூதரான ஜமால் உசேன் அல் சாபிக்கு துபாயில் இருந்து வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. அதை கைப்பற்றிய சுங்க இலாகா,  வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக அமீரக தூதரகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்த சொப்னா, சரித் குமார், சந்தீப் நாயர், ரமீஸ் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சொப்னாவுடன் நெருக்கமாக இருந்த கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த தங்கக் கடத்தலுக்கு அமீரக துணைத் தூதர் ஜமால் உசேன் அல் சாபி, தூதரகத்தில் அட்டாஷே என்ற உயர் பொறுப்பை வகிக்கும் ராஷித் கமீஸ் அலி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சொப்னா கும்பல் கூறியது.  இவர்கள் இருவரும் திடீரென துபாய் சென்று விட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்த மத்திய வெளியுறவுத் துறையிடம் சுங்க இலாகா அனுமதி கோரியது.இது பற்றி பல மாதங்களாக முடிவு எடுக்காமல் இருந்த வெளியுறவுத் துறை, தற்போது அனுமதி அளித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளதுபதில் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சுங்க இலாகா தீர்மானித்துள்ளது….

Related posts

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்

மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!

ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம்