கேரளா, அசாம் கர்நாடகாவில் பள்ளி திறப்பு

புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ளதால், பல மாநிலங்கள் முதல் கட்டமாக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகளை திறந்தன. இந்நிலையில், கேரளா, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கேரளாவில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகளில் மாநிலம் முழுவதும் 10  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். ஆனால் உண்டு, உறைவிட பள்ளிகளை திறப்பது  குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபோல் கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள்  உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஜனவரி 4ம்  தேதி முதல் செயல்பட உள்ளன. காலை 8:30 முதல் மாலை 5 மணிவரை வகுப்புகள் செயல்பட உள்ளன….

Related posts

தூத்துக்குடி அதிகாரிகள் சொத்து விவரங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்

தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியவில்லை ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியால் ஆந்திராவில் கஜானா காலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை