கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல உத்தரவு: பறவைகளின் இறைச்சி விற்பனைக்கு தடை

கோட்டயம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.கோட்டயத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவை இறைச்சி, முட்டைகள் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் இறைச்சிக்காக விற்கப்படும். இதற்காக ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பண்ணைகள் அமைத்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்துகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த பறவைகளின் மாதிரிகளை கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இது மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் உடனடியாக இந்த பறவைகளை அழிக்க ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் அளிக்கப்பட்டன. மேலும் கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் கோட்டையம் மாவட்டத்தில்  உள்ள அய்மனம், கல்லரா, வெச்சூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, முட்டைகள் விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்  எனவும் அறிவுறுத்தியுள்ளனர். …

Related posts

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து