கேரளாவில் பருவமழை தீவிரம் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பலத்தமழை பெய்யும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளதால்  பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில்  கடந்த ஜூன் முதல் வாரத்தில்  தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த வருடம்  எதிர்பார்த்த அளவு மழை  பெய்யவில்லை. கடந்த சில வாரங்களாகவே எந்த  பகுதியிலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று முதல் தென்மேற்கு  பருவமழை மீண்டும் தீவிரமடையும்  என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி  மையம் அறிவித்துள்ளது. இன்று காசர்கோடு, கண்ணூர்,   கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம்,   ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை   விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 9ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று  வானிலை  ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. அரபிக்கடலில் பலத்த  காற்றும்  வீசக்கூடும் என்பதால் 8, 9ம் தேதிகளி்ல மீனவர்கள் கடலுக்கு செல்ல  வேண்டாம்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வங்காள விரிகுடாவில்  ஆந்திரா, ஒடிசா  ஆகிய மாநிலங்களில் வரும் 11ம் தேதி குறைந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம்  உருவாக வாய்ப்பு உள்ளது என்று மத்திய வானிலை ஆராய்சி மையம்  தெரிவித்துள்ளது….

Related posts

விசாரணை அமைப்புக்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்

ஆந்திராவில் முதியோர், விதவைகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை: வீடுகளுக்கே சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்

துணைநிலை ஆளுநர் தொடர்ந்த வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு