கேரளாவில் களையிழந்த ஓணம் பண்டிகை

திருவனந்தபுரம்: கேரளாவில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை இந்த வருடமும் கொரோனா பரவல் காரணமாக களையிழந்து காணப்படுகிறது. பழங்காலத்தில் கேரளாவை செழிப்பாக ஆண்ட மகாபலி மன்னர், ஆண்டு தோறும் மக்களை சந்திக்க வரும் நாளை கேரள மக்கள் ஓண பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். வசந்த விழாவான இந்த பண்டிகை சாதி மத பேதமின்றி, ேதசிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஓண பண்டிகை நேற்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாள் விழா நடக்க உள்ளது. இந்த 10 நாட்களும் பொது மக்கள் தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ பூக்கோலம் இடுவார்கள். அதன்படி நேற்று முதல் அனைவரும் வீடுகளின் முன்பு அத்தபூ கோலமிட தொடங்கி உள்ளனர். 10ம் நாளான திருவோணம் வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களும் கேரளா விழாக்கோலம் பூண்டிருக்கும்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ஓண பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை. கேரள அரசு சார்பில் நடத்தப்படும் ஓண பண்டிகை கொண்டாட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் சுற்றுலாத்துறை சார்பில் ஓணம் கொண்டாட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.ஓணத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் கண்கவர் பேரணி நடத்தப்படுவது வழக்கம். இந்த முறையும் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தப்பூ கோலத்தை பொறுத்தவரை ஓணத்தின் முதல் நாள் முதல் 10 நாள் வரை வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் மக்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். பொது இடங்களில் கோலம் போடுவது இந்த வருடமும் நிறுத்தப்பட்டுள்ளது. குமரியில் இருந்து 30 டன் பூக்கள்கேரளாவில் ஓணம் பண்டிகையை பெரும்பாலும் குமரி மாவட்ட தோவாளை பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. வழக்கமாக ஓண பண்டிகையின் தொடக்கத்தில் 40 டன் வரைக்கும் இங்கிருந்து பூக்கள் கொண்டு செல்லப்படுமாம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தொடக்க நாளான நேற்று 20 முதல் 30 டன் பூக்களே கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இன்னும் வரும் நாட்களில் 45 முதல் 60 டன் வரை பூக்கள் கொண்டு செல்லப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினர்….

Related posts

நேபாளத்தில் கடும் வெள்ளம்: இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!

பட்டியலின மாணவரை ஐஐடியில் அனுமதிக்க உத்தரவு