கேரளாவில் அதிர்ச்சி; தடுப்பூசி செலுத்திய பிறகும் 40,000 பேருக்கு கொரோனா: புதிய வகை வைரஸ் பரவலா?

புதுடெல்லி: கேரளாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் 40,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த போதிலும், கேரளாவில் மட்டும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்த 40 ஆயிரம் பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, மரபணு ஆய்வு நடத்தப்பட இருப்பதாகவும், வரும் 15ம் தேதிக்குப் பிறகு ஒன்றிய நிபுணர் குழு மீண்டும் கேரளாவில் ஆய்வு செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:  கடந்த 24 மணி நேரத்த்தில் புதிதாக 38,353 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது.  புதிதாக 497 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 351 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த 140 நாட்களில் இல்லாத வகையில் பதிவாக குறைந்தப்பட்ச எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் 53.24 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 51 கோடியே 56 லட்சத்து 11 ஆயிரத்து 35 டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது. . இன்னும் 2.25 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது….

Related posts

பாஜக மாஜி எம்பிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கிய பாதுகாப்பு வாபஸ்.! நீதிமன்றம் கண்டித்ததால் டெல்லி போலீஸ் நடவடிக்கை

திரிபுராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 17 லட்சம் பேர் பாதிப்பு: வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்

பள்ளியின் பால்கனி சுவர் சரிந்து விபத்து : 40 குழந்தைகள் படுகாயம்