கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்

மும்பை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் 99 என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது லீ மாஸ்க் என்ற பெயரில் 36 நிமிட  குறும்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். அவரது மனைவி சாய்ரா கூறிய யோசனையில் இருந்து இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார். இது இசையையும், மரணத்தையும் இணைத்து சொல்லும் புதுமையான படம். இதில் ஜெனிபர் கான்னெல்லி மற்றும் நோரா அர்னெசெடர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இது குறித்து ரஹ்மான் கூறியிருப்பதாவது: இந்த படம் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய உணர்வுபூர்வமான ஒரு படம். ஒரு முழுநீள சினிமா அனுபவத்தை இந்த படம் தரும். கடந்த சில வருடமாக இதை இயக்கும் ஐடியா இருந்தது. இப்போதுதான் அது கைகூடி வந்திருக்கிறது. இவ்வாறு ரஹ்மான் கூறினார்….

Related posts

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு

ஒன்றிய அமைச்சரிடம் தஞ்சாவூர் எம்.பி. கோரிக்கை மனு

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!