கேட்பாரற்று நின்றிருந்த காரில் ₹1 லட்சம் குட்காவை கடத்தி வந்தது யார்?

விழுப்புரம், ஆக. 9: விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் பகுதியில் கடந்தசில நாட்களாக பதிவெண்இல்லாத கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்தபகுதி பொதுமக்கள் காவல்துறையினர் 100க்கு போன் செய்து தகவல்அளித்துள்ளனர். பின்னர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு தகவல்அளிக்கப்பட்ட நிலையில் தாலுகா காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று காரை சோதனையிட்டனர்.

அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட 100 கிலோ எடைகொண்ட புகையிலைபொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். பின்னர் அந்த காரை பறிமுதல்செய்து காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். வெளியூரிலிருந்து குட்காவை கடத்திவந்த நபர் போலீசாருக்கு பயந்து சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிசென்றார்களா? என்பது குறித்தும், அவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது