கேஎஸ்ஆர் கல்லூரி- மிட்சுபா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு, அக்.8: கே.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியும்- மிட்சுபா நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீனிவாசன், மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவர் யூசுகே இச்சுகாவா ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். இந்த ஒப்பந்தம் மாணவர்கள், பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் ஆளுமை வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மிட்சுபா நிறுவன முதன்மை மேலாளர் ராஜ்குமார், துணை மேலாளர்கள் வெங்கடேஷ்குமார், மஞ்சுளாதேவி, மூத்த நிர்வாகி வெங்கடேசன், கல்லூரி முதல்வர் வெங்கடேசன், நிர்வாக இயக்குநர் மோகன், கல்லூரி டீன் மற்றும் இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்