கெடார் அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்-கலெக்டர், எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வெங்கந்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாதந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளியில் வழக்கம்போல் மாணவ-மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிற்பகல் சுமார் 3 மணியளவில் திடீரென ஒரு சில மாணவ-மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு அதில் 2 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவ- மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அருகிலுள்ள கெடார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக 31 மாணவர்கள் வயிற்று வலியால் அவதிப்படவே ஆம்புலன்ஸ் வரவைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்.எல்.ஏ ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களின் நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், எதனால் மாணவர்களுக்கு வாந்தி வயிற்று வலி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர். தொடர்ந்து பெற்றோர்களிடம் ஆறுதல் கூறி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதாக உறுதியளித்தனர். இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்