கெங்கவல்லி அருகே டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கவல்லி, செப்.1: கெங்கவல்லி அருகே 95.பேளுர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், 95.பேளுர் ஊராட்சியில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த 4 கிராம மலைவாழ் மக்கள் 50 பேர், கெங்கவல்லி பிடிஓ அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, பிடிஓவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடமலை முதல் நல்லமாத்தி வரை 10 கிலோ மீட்டர் தூரம் பயன்படுத்த முடியாத தார்சாலையை அகலப்படுத்தி, புதிய தரமான சாலை அமைக்க வேண்டும். பெரியகரட்டூர் -நரிப்பாடிக்கு இடையிலுள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றி அமைக்க வேண்டும். பெண்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பயன்படுத்திய ஐந்து வேளை நகர பஸ் வசதி, விவசாய மக்கள் அறுவடை செய்யும் தானியங்களை உலர்த்த, ஊருக்கு ஒரு களம் அமைக்க ேவண்டும் உள்ளிட்ட 9கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது, கெங்கவல்லி பிடிஓ பரமசிவம், சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம், கூடமலை- நல்லமாத்தி வரை 8.2 கிலோ மீட்டர் தார் சாலை அமைப்பதற்கு, பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ₹3கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு, மத்திய அரசிடம் ஆவணங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு