கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பேருந்தில் செயின் பறித்த பெண்கள் கைது: தப்பிய 2 பேருக்கு வலை

 

தண்டையார்பேட்டை, ஜூன் 3: தண்டையார்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் செல்வி (63). இவர், கடந்த மாதம் 16ம் தேதி தங்கசாலை பேருந்து நிலையத்திலிருந்து தண்டையார்பேட்டை அகஸ்தியா பேருந்து நிறுத்தத்திற்கு மாநகர பேருந்தில் (தடம் எண்.56) பயணம் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்வியின் கழுத்தில் கிடந்த 10 மற்றும் 7 சவரன் மதிப்புள்ள 2 செயின்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து செல்வி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து செயின் பறிப்பில் ஈடுப்ட்ட நபர்கள் குறித்து விசாரித்தனர். இந்நிலையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த தெய்வயானி (30), திருவெற்றியூர் தேவி நகரைச் சேர்ந்த அகிலா (எ) அஞ்சலி (34) என்பது தெரிந்தது.

அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் தண்டையார்பேட்டை, பாரிமுனை, திருவொற்றியூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கும்பலை யானைகவுனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

12 மணி நேரம் போக்குவரத்து தடை ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம் பிணையம் வழங்க போலி ஆவணங்கள் தாக்கல்

கனரக லாரி மோதியதால் விரிசல் ஏற்பட்ட சமயபுரம் நுளைவு வாயில் இடித்து அகற்றம்

குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் அதிகாரி ஆய்வு