கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு வணிகக்கடன் வழங்குவதற்கு நிபந்தனைகள் தளர்வு: அதிகாரிகள் தகவல்

வேலூர், ஆக.19: கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுவணிக கடன்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் நகைக்கடன், சம்பள கடன், சிறுவணிக கடன் உச்சவரம்பு உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் வழங்குதலில் தனி நபர் பிணையத்தின் அடிப்படையில் வழங்கும் கடன்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில், சிறுவணிக கடன் பெறும் நபர்கள் பலர், பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், பழ வியாபாரம் போன்ற சிறு தொழில்கள் செய்பவர்கள் உள்ள நிலையில், சிறுவணிக கடன் பெறுவதற்கு தனியார் மற்றும் அரசுதுறைகளில் பணிபுரிவோர் பிணையம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையால், இக்கடன்கள் பெற்று வந்த சிறு தொழில் புரிவோர் மீண்டும் கடன்பெற சிரமம் ஏற்படுகிறது.

சிறு தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு, அவர்களை போல் சிறு வியாபாரம் அல்லது அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இல்லாதவர்கள், சிறுதொழில் செய்பவர்களுக்கு பரிச்சயமான நபர்களே பிணையம் அளிக்க முன் வருகின்றனர். இதையடுத்து நிபந்தனையின்படி, அரசு அல்லது தனியார்துறையில் சம்பளம் பெறுபவர்களிடம் பிணையம் பெறுவது சிரமமாக உள்ளதென்பதால், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ள நபர்களை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட இக்கடன் திட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதாக தெரிய வருகிறது.

Related posts

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்