கூட்டுறவு வங்கிகளில் மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லாத தொழில் கடன் விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில்,செப்.12: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு தொழில் தொடங்குவதற்கு மற்றும் தொழில் அபிவிருத்திக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 19ம்தேதி அன்று சிறப்பு கடன் மேளா நடைபெற உள்ளது.

எனவே தகுதியுள்ள அனைவரும் இக்கடன்களுக்கான விண்ணப்பத்தினை தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் மற்றும் முழு அளவு புகைப்படம் (தலா ஒன்று) மற்றும் வங்கியால் கோரப்படும் இதர ஆவணங்களுடன் அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி