கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்

 

விருதுநகர், ஜூன் 12: விருதுநகர்மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சாத்தூரில் செயல்பட்டு வரும் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். இப்பயிற்சி இரு பருவங்களைக் கொண்டது. 10, 12ம் வகுப்பு பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.

1.8.2024 முதல் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஜூன் 10ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tncu.tngovin மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் இணையம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரடியாகவோ,தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க இயலாது தமிழில் மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100யை இணைய வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதுடன் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்த சான்றிதழ் நகல்களையும் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.18,750 முழுவதும் ஒரே தவணையில் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், பிஆர்சி செட் எதிர்புறம், சாத்தூர்- 626 203 விருதுநகர் மாவட்டம் என்ற முகவரியில் நேரில் அல்லது 04562-260293 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது முதல்வர் அலைபேசி எண் 88071 59088 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு