கூட்டணியில் பிளவு இத்தாலி பிரதமர் திடீர் ராஜினாமா

ரோம்: இத்தாலியில் தன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை கூட்டணி கட்சியினர் புறக்கணித்ததால் பிரதமர் மேரியோ ட்ராகி பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியில் வலது, இடதுசாரிகள், பாப்புலிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மேரியோ ட்ராகி கடந்தாண்டு பிரதமராக பொறுப்பேற்றார்.  இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய கொரோனா மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் மேரியோவின் வேண்டுகோளை கூட்டணி கட்சிகள் நிராகரித்தன. இதனால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது.இதன் எதிரொலியாக செனட் அவையில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதனை கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இதை அடுத்து, ட்ராகி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்ற அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவரை காபந்து பிரதமராக பணியை தொடர கேட்டுக் கொண்டுள்ளார். மேரியோவின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிய இருந்த நிலையில், அவர் ராஜினாமா செய்திருப்பதால், இத்தாலியில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிகிறது….

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி