கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை பெரம்பலூரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி 600 மாணவ,மாணவிகள் பங்கேற்பு

 

பெரம்பலூர், நவ.22: பெரம்பலூரில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் சார்பாக நடந்த டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை- கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் நேற்று 62வது தேசிய மருந்தியல் வாரவிழாவை முன்னிட்டு, டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் வழியாக ரோவர் பள்ளி அருகே நிறைவடைந்தது. முன்னதாக ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் டாக்டர் வரதராஜன் வரவேற்றார். பேரணியை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் நெப்போலியன் டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்கள் பரவும் முறை, அதனைக் கட்டு படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கைகளில் ஏந்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மருந் தியல் கல்லூரி பேராசிரியர்கள், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி மேலாளர் சத்திஷ்வரன், அலுவலக மேலாளர் ராஜா ஆகியோர் மேற் பார்வையில் பேரணி நடை பெற்றது. கல்லூரி துணை முதல்வர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி