கூடுதல் விலைக்கு மது விற்பனை: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: அரசு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காட்டூர் காவல்நிலையம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தமனஞ்சேரி ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் பல நாட்களாக அரசு மதுபாட்டில்களை கூடுதல் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை காட்டூர் போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக பொன்னேரி ஆர்டிஒ மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் நேற்று காட்டூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இதனால் அங்கு சிறிது ேநரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு? ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது