கூடுதல் வகுப்பறை கட்டிடம்: எம்எல்ஏ தமிழரசி திறந்து வைத்தார்

 

திருப்புவனம்,அக்.17: திருப்புவனம் சிவன் கோயிலின் பின்புறம் ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் ஓடு வேய்ந்த பழமையான கட்டிடம் பழுதான நிலையில் இருந்ததால் அதனை இடித்து அகற்றப்பட்டது. மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி ரவிக்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டது.

நேற்று அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் பள்ளி கட்டிடத்தை மாணவ குழந்தைகளிடம் கத்தரியை கொடுத்து ரிப்பனை வெட்ட செய்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய குழுத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகுமத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி சேங்கைமாறன், மாரிதாஸ், ராமலெட்சுமி,செல்வி, கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி,நகர் செயலாளர் நாகூர்கனி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு