கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, `பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியும், பார்வையற்றோர் பள்ளியில் தேர்வு எழுதிய 28 பேரும் தேர்ச்சி பெற்றதால் மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் 20வது இடத்தை பிடித்து இருக்கிறது. எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி வீதம் குறைந்து காணப்படுகிறதோ அந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலேயே முதன் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை அடிப்படை கல்வியை சிறப்பாக செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் மையம் திறந்து செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏதேனும் புகார்கள் தனது கவனத்திற்கு வந்தால் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்பதலை வலியுறுத்தி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்