கூடலூர் அருகே மூதாட்டியைக் கொன்ற மக்னா யானை 18 நாட்களுக்கு பின் பிடிபட்டது

நீலகிரி: கூடலூர் அருகே தேவாலாஉள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து குடியிருப்பில் உள்ள அரிசியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்ட தந்தம் இல்லாத PM2 மக்னா ஆண் காட்டு யானை வாளவயல் குடியிருப்பு பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை இடித்து மூதாட்டி ஒருவரை தாக்கிக் கொன்றது. இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் வனஅப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் அதிநவீன ட்ரோன் கேமராக்களை கொண்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கடந்த 18 நாட்களாக இரண்டு குழுக்களாக பிரிந்து யானயை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் மக்னா யானை புளியம்பாறை பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் தென்பட்டது. இதனைத் தொடர்ந்து யானையின் கால் தடத்தை வைத்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை முண்டக்கொல்லி வனப்பகுதியில் தென்பட்டது. வீடுகளை சேதப்படுத்தியதுடன் பாப்பாத்தி என்ற யானையையும் மக்னா யானை அடித்துக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து புளியம்பாறை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM2 மக்னா யானை லாரியில் கொண்டு சென்று முதுமலை வனப்பகுதியில் விடுவதற்கான பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கூடலூரை சுற்றியுள்ள பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வந்த PM2 மக்னா யானை பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்