கூடலூர் அருகே குடிநீர் தேடி வந்த ஒற்றை யானை பண்ணை குட்டையில் சிக்கியது

கூடலூர் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம். மானந்தவாடி தாலுகாவிற்குட்பட்ட பகுதி திருநெல்லி வனச்சரகம். இதனை ஒட்டிய தனியார் தோட்டத்தில் உள்ள பண்ணை குட்டை உள்ளது.  நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு குடிநீர் தேடி வந்த ஒற்றை காட்டுயானை இந்த பண்ணை குட்டையில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தது. நேற்று அப்பகுதிக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் யானை குட்டையில் சிக்கியிருப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் ஜெயபிரகாஷ், வனத்துறையினர் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து குட்டையின் ஒரு பகுதியில் மண்ணை இடித்துத் தள்ளி யானை வெளியேற வழி ஏற்படுத்தினர். சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பின் யானை குட்டையை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. மீட்கப்பட்ட யானை சுமார் 6 வயது பெண் யானை என்றும், குட்டையில் சிக்கியதில் அதற்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. யானை ஆரோக்கியமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்