கூடலூரில் வைக்கோல் படப்புக்கு தீ மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

 

கூடலூர், மே 4: கூடலூரில் வைக்கோல் படப்புக்கு தீ வைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர் அருகே சுக்காங்கல்பட்டியை சேர்ந்த ராஜா மற்றும் கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த அழகேசன் இருவரும் வைக்கோல் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் அறுவடை பணி முடிந்ததால், கூடலூர் தாமரைக்குளம் பகுதியில் 3 வைக்கோல் படப்புகள் வைத்து பராமரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வைக்கோல் படப்பிற்கு ராஜா காவல் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் ஊற்றி வைக்கோல் படப்புக்கு தீ வைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா சத்தம்போட்டார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை வருவதற்கு தாமதமானதால் இரண்டு படப்புகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து வைக்கோல் படப்புக்கு தீ வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்