குவாலிபயர் 2ல் விளையாட நைட் ரைடர்ஸ் தகுதி: வெளியேறியது ஆர்சிபி

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட் செய்தது. தேவ்தத் – கேப்டன் கோஹ்லி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 49 ரன் சேர்த்தது. படிக்கல் 21 ரன் எடுத்து பெர்குசன் வேகத்தில் கிளீன் போல்டானார். ஸ்ரீகர் பரத் 9 ரன், கோஹ்லி 39 ரன் (33 பந்து, 5 பவுண்டரி), டி வில்லியர்ஸ் 11 ரன், கிளென் மேக்ஸ்வெல் 15 ரன் எடுத்து நரைன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி அணி 112 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஷாபாஸ் அகமது 13 ரன், டேனியல் கிறிஸ்டியன் 9 ரன் எடுத்து வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. ஹர்ஷல் படேல் 8, ஜார்ஜ் கார்ட்டன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து வென்றது. சுப்மன் கில் அதிகபட்சமாக 29 ரன் (18 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். வெங்கடேஷ் ஐயர் 26 ரன், சுனில் நரைன் 26 ரன் எடுத்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், சாஹல் தலா 2 விக்கெட் எடுத்தனர். பெங்களூர் அணி பரிதாபமாக வெளியேறிய நிலையில், நாளை நடைபெற உள்ள குவாலிபயர்-2 ஆட்டத்தில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன….

Related posts

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் சேலத்தில் இன்று தொடக்கம்: இது வரை சாம்பியன்கள்

இந்தியாவிடம் தொடர் தோல்வி வெற்றியை தொடங்குமா தெ.ஆ: இன்று சென்னையில் பெண்கள் டி20

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள்