குழித்துறை பாலத்தில் மண் திட்டுகளால் தேங்கும் மழை நீர்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மார்த்தாண்டம்  :கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை ஆற்றுபாலம் மிக முக்கியமான பாலமாகும். இரு மாநிலங்களை இணைக்கும் சாலை என்பதால் இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் உரிய பராமரிப்பு செய்யப்படாததால் பாலத்தின் தார்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பாலத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோரத்தில் மண் குவியல்கள் உருவாகி பாலத்தின் மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பாலம் பலவீனப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குழித்துறை பாலத்தில் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண் திட்டுகளை அகற்ற வேண்டும். பாலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்