குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, குச்சனூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் உறைகிணறு அமைத்து குடிநீரை சுத்திகரிப்பு செய்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே இருக்கும் மேல்நிலைத் தொட்டி அருகே, கூடுதலாக ஒரு மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தொட்டிகளிலும் நீரை மேலேற்றி, பின்னர் சுத்திகரித்து ராஜபாளையம் குச்சனூர் பகுதியில் உள்ள பல வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இணைப்புச்சாலையில் நூலகம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. குழாய் மட்டுமல்லாமல் கேட்வால்வும் உடைந்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் மற்றும் கேட்வால்வ் உடைப்பை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி