குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைகள் நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

திருச்சி, ஜூன் 15: உலக குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி ரங்கம் பகுதியில் கடை மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா? என ஆய்வு அதிகாரிகள் மேற்கொண்டு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நடத்தினர். உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ரங்கம் பகுதியில் கடை மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா? குறித்து ஆய்வு மற்றும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு, ரங்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா உதவி ஆய்வாளர் பரிமளா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் பரமேஸ்வரி, தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் இளங்கோவன் ஜெகதீஷ் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்