குழந்தை திருமணத்தை ஆதரித்தால் சிறை தண்டனை

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 8: திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, நுணாக்காடு ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய ஊராட்சி அளவிலான குழந்தைகள் நல கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன் தலைமையில் நடைபெற்றது. திருவாருர் சமூகநல பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்தும், திருமண வயதை தாண்டாத ஆண், பெண் திருமணங்களை நடத்தவோ, ஆதரிக்கவோ கூடாது.

அப்படி செய்தால் சட்டபடி சிறை தண்டனை பெறக்கூடும். மேலும் ஒரு லட்சம் அபராதம் செலுத்த நேரிடும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, சித்ரவதை செய்தாலும் சிறைதண்டனை உண்டு எனவும் அரசு மூலம் ஆதரவற்ற தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, ஊராட்சி செயலர் இளங்கோவன், ஊராட்சி துணைத்தலைவர் துரைராஜ், மக்கள் பிரதிநிதிகள் இளையகுமார், மேனகா அன்பரசன், சத்யா செல்வம், செவிலியர் சுஜாதா, அங்கன்வாடி பணியாளர்கள் சாந்தி, நித்யா, ரேணுகா, கணினியாளர் சதீஸ், மகளிர் திட்ட கணக்காளர் ரோஸி, பயிற்றுனர் கல்பனா, சுகாதார பணியாளர்கள் கணபதி, பாப்பாத்தி, கிருஷ்ணம்மாள், கங்கையம்மாள், வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு