குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை; தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்

பெரம்பலூர்,அக்.2: பள்ளி தலைமையாசிரியர் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்- பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பள்ளித் தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று (1ம் தேதி) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட அளவி லான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் குழந் தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறையில் இருந்து பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்து பேசியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது, பாலியல் வன்முறை தொடர்பாக பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறையின் சார்பில், பெண் குழந்தைகளை காப் போம் பெண் குழந்தைக ளுக்கு கற்பிப்போம்- திட்டத் தின்கீழ் பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிக ளில் பணி யாற்றி வரும் 250 தலைமை ஆயாசிரியர்களுக்கு விழிப் புணர்வு பயிற்சி நடத்தப் பட்டுள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற் றுள்ள தலைமையாசிரியர் கள் தங்கள்பள்ளியின் ஆசி ரியர்கள், மாணவர்களுக்கு பாலியல்வன்முறை தொடர் பான விழிப்புணர்வு பணி களை மேற்கொள்ள வேண் டும். குழந்தைகள் அதிக நேரம் பள்ளியில்தான் உள் ளார்கள். ஆகையால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந் தரவு, இதர பிரச்சினை களை ஆசிரியர்கள் எளி தாக கண்டறிய முடியும். பாலியல் தொடர்பான பிரச் சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். மாணாக்கர்களுக்கு நல் வழிகாட்டுதல்களையும், மாணவ பருவத்தில் ஏற்ப டும் பாலியல் மாற்றங்க ளை எதிர்கொள்வது குறித் தும் ஆசிரியர்கள் கற்பித் திட வேண்டும்.

மேலும், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை யை அதிகரித்தல், பிறப் பால் ஆண், பெண் சமம் என்ற கருத்தை வலியுறுத் தச் செய்தல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங் கும் பெண்களை எடுத்துக் காட்டாக எடுத்துரைத்து பெண் உயர்கல்வியை ஊக் கப்படுத்திட வேணடும். குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை ஏற்படுத்துபவர் கள் மீது புகார் தெரிவித்திட பள்ளிகளில் புகார் பெட்டி கள் வைத்திட வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை தடுப்புச் சட்டங் கள் குறித்தும், குழந்தை கள் பாதுகாப்பு உதவி எண் 1098 குறித்தும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, துளிர் அறக் கட்டளை சார்பில், குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் 2012 பற்றியும், மாணவ,மாணவி களின் பாதுகாப்பு, குழந் தைகளுக்கு எதிரான பாலி யல் வன்முறையிலிருந்து காப்பது குறித்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைஅலுவலர் ஜெய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், மாவட்ட கல்வி அலுவலர் கள் செல்வக்குமார் (இடை நிலைக் கல்வி), லதா (தனி யார் பள்ளிகள்), அய்யா சாமி (தொடக்கக்கல்வி), துளிர் அறக்கட்டளை நிர் வாகிகள் நான்சி தாமஸ்,  வித்யா ரெட்டி மற்றும் பல்வேறு பள்ளி தலைமை யாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை