குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி தமிழகம் முழுவதும் 23ம் தேதி போடப்படும்

சென்னை: தமிழகத்தில் தற்போதைய சூழலில் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒரு தவணைக்கு ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில், நியூமோகோக்கல் தடுப்பூசி தேசிய அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன்படி, பிறந்தவுடன் குழந்தைகளுக்கு 1 மாதம், 3 மாதம் மற்றும் 9 மாதங்களில் 3 தவணையாக அந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் 3 தவணைகள் செலுத்த அதற்கு ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். அதனை தற்போது அரசு இலவசமாக வழங்க இருக்கிறது. வரும் 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்