குளோபல் உலக சாதனைக்காக 50 நிமிடங்களில் 50 ஆசனங்கள்: அசத்திய பள்ளி மாணவன்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அரிமா பள்ளியில் நான்காம் வகுப்பு படிப்பவர் நவீன்குமார். இவர் பந்து ஒன்றை வைத்துக்கொண்டு ஐம்பது நிமிடத்தில் 50 ஆசனங்களை செய்யும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வைத்தார். பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர்  திவ்யநாதன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா மற்றும் மும்பை குளோபல் உலக சாதனை நிறுவனம் நடுவர்களும், ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குளோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் மாணவர் நவீன்குமார் 6 அடி உயரத்தில் 50 பல்வேறு வகையான ஆசனங்களை 50 நிமிடத்தில் தன் உடலில் பந்தை பல்வேறு இடங்களில் வைத்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டை அரிமா மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். யோகா பயிற்சியாளர் சையது ஜீனைத் முனீர் நன்றி கூறினார்….

Related posts

கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224ஆக உயர்வு

திருமங்கலத்தில் உள்ள கடையில் லெமன் ஜூசில் பிளாஸ்டிக் நூல்: 2 ஆயிரம் அபராதம் விதிப்பு