குளித்தலை பஸ்நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை

குளித்தலை, டிச.23: குளித்தலை பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கரூர் மாவட்டம் திருச்சி -கரூர் மெயின் ரோட்டில் குளித்தலை பஸ் நிலையம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்பொழுது வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதாலும், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதாலும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக டிரான்ஸ்பார்மர் உள்ளது. மேலும் வாகன போக்குவரத்து சீர் செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு இதனால் பெரும் சிரமத்துக்குள்ளாக இருந்து வருவதால் போக்குவரத்திற்காக அவ்விடத்தில் இருக்கும் மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றுவது சம்பந்தமாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன், மின்துறை உதவி செயற்பொறியாளர் பாலகுமார், நகராட்சி ஆணையர் நந்தகுமார், பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் பல்லவி ராஜா, அரசு வக்கீல் சாகுல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்